Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரையில் வெளுத்து வாங்கிய மழை; தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் தத்தளிப்பு

மதுரையில் வெளுத்து வாங்கிய மழை; தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் தத்தளிப்பு

By: Monisha Wed, 07 Oct 2020 3:30:18 PM

மதுரையில் வெளுத்து வாங்கிய மழை; தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் தத்தளிப்பு

மதுரையில் நேற்று மாலை தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மதுரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், தல்லாகுளம், திருப்பாலை, கோ.புதூர், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், ஒத்தக்கடை, எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், காளவாசல், அரசரடி, கோரிப்பாளையம், சூர்யாநகர், கடச்சனேந்தல் மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தது.

இதனால் ரோட்டில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் நிலைய பகுதியில் ரோடுகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து சிறிது நேரம் முடங்கியது. இதே போல் மதுரையின் பிரதான ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் தத்தளித்துச் சென்றன.

madurai,rain,water,vehicles,plowing works ,மதுரை,மழை,தண்ணீர்,வாகனங்கள்,உழவு பணிகள்

பெரியார் பஸ் நிலையம் அருகே பாண்டி பஜார் பகுதியில் ஒரு கடையின் வெளிப்புற மேற்கூரை மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு மேல் பலத்த மழை பெய்ததால் வேலைக்கு சென்றவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளானார்கள். இந்த மழையால் கடந்த 3 நாட்களாக மதுரையில் நிலவி வந்த வெப்பம் குறைந்து குளிச்சியான சூழ்நிலை நிலவியது.

மேலூர் பகுதியிலும் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 10 நாட்களுக்கு பிறகு மழை பெய்துள்ளதால் உழவு பணிகள் தொடங்குவதற்கு வசதியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்வுடன் தெரிவித்தனர்.

Tags :
|
|