Advertisement

ரஜினி மனஉளைச்சலில் உள்ளார்; அர்ஜுன மூர்த்தி தகவல்

By: Nagaraj Thu, 31 Dec 2020 12:17:27 PM

ரஜினி மனஉளைச்சலில் உள்ளார்; அர்ஜுன மூர்த்தி தகவல்

ரஜினி மன உளைச்சலில் உள்ளார்... தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் மன உளைச்சலில் இருப்பதாக அவரது ஆதரவாளர் அர்ஜூன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு உடல்நல பாதிப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் இன்று கட்சி குறித்து அறிவித்திருப்பார். ஆனால் அத்தனை திட்டங்களும் பாழாய் போய்விட்டன. அரசியல் வருகைக்கு முழுக்கு போட்டு விட்டார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

arjun murthy,physicians,counseling,rajini,depression ,
அர்ஜுன் மூர்த்தி, மருத்துவர்கள், ஆலோசனை, ரஜினி, மனஉளைச்சல்

அப்போது அவர், தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை ரஜினி எடுப்பார் என தெரிவித்துள்ளார். நன்கு சிந்தித்து ரஜினிகாந்த் ஆதரவு முடிவு எடுப்பார் என்றும், இந்த விஷயத்தில் அவரை யாரும் நிர்பந்திக்க முடியாது என அர்ஜூன் மூர்த்தி கூறியுள்ளார்.

மேலும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லையே என்ற மன உளைச்சலில் நடிகர் ரஜினிகாந்த் இருப்பதாக அர்ஜூன் மூர்த்தி தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின்படி ரஜினி இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என்றும், மக்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
|