Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஜினி தலைமையில் மெகா கூட்டணி; தகவல்களால் அரசியல் களம் பரபரப்பு

ரஜினி தலைமையில் மெகா கூட்டணி; தகவல்களால் அரசியல் களம் பரபரப்பு

By: Nagaraj Wed, 16 Sept 2020 12:18:51 PM

ரஜினி தலைமையில் மெகா கூட்டணி; தகவல்களால் அரசியல் களம் பரபரப்பு

ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சியுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்கப்பட உள்ளது என்ற பரபரப்பு தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் தொடராது என்று கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கு அறிகுறியாக தற்போதே இரு கட்சிகளின் தலைவர்கள் அதிமுகவை விமர்சித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

rajini leadership,strong alliance,information,opportunity ,ரஜினி தலைமை, வலிமையான கூட்டணி, தகவல்கள், வாய்ப்பு

அதேபோல் பாமகவும் அதிமுக கூட்டணியில் நீடிப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை போதுமான சீட் கிடைக்காததால் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

இம்முறை திமுக 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதால் மீதமுள்ள 34 தொகுதிகளிலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாது என்றே தெரிகிறது.

இந்நிலையில் ரஜினி தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ரஜினி தலைமையில் பாமக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் கட்சிகள், தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் இணையும். முதல் முறையாக அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு புதிய வலிமையான கூட்டணி அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :