Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினி நிச்சயம் வெளியிடுவார்- ரசிகர்கள் உறுதி

புதிய கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினி நிச்சயம் வெளியிடுவார்- ரசிகர்கள் உறுதி

By: Monisha Mon, 28 Dec 2020 4:08:42 PM

புதிய கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினி நிச்சயம் வெளியிடுவார்- ரசிகர்கள் உறுதி

நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை விரைவாக முடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்ட திட்டமிட்டார். இதற்காக காலை 7.00 மணியில் இருந்து இரவு 9.00 மணி வரையில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மூன்று நாட்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரஜினியின் உடல்நிலை சீரானது. இருப்பினும் ஒரு வாரம் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என ரஜினிகாந்தை டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

shooting,politics,corona,therapy,leisure ,படப்பிடிப்பு,அரசியல்,கொரோனா,சிகிச்சை,ஓய்வு

இதனைத்தொடர்ந்து நேற்று மாலை சென்னை திரும்பிய ரஜினிகாந்த் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். புதிய கட்சி தொடங்கும் தேதியை வருகிற 31-ம் தேதி வெளியிடப்போவதாக ரஜினிகாந்த் ஏற்கனவே கூறி இருந்தார். அதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் தான் ரஜினியை ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் ரஜினி புதிய கட்சியின் அறிவிப்பை திட்டமிட்டபடி வெளியிட மாட்டார் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் இதனை ரசிகர் மன்ற நிர்வாகிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘31-ம் தேதி அன்று கட்சி தொடங்கும் தேதியை தான் சொல்ல இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். மற்றபடி அன்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. எனவே திட்டமிட்டபடி ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார்கள்.

Tags :
|