Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஜினிகாந்தின் அரசியல் பயணம் நிச்சயம் வெற்றியில் முடியும்; ரசிகர்களின் நம்பிக்கை

ரஜினிகாந்தின் அரசியல் பயணம் நிச்சயம் வெற்றியில் முடியும்; ரசிகர்களின் நம்பிக்கை

By: Monisha Mon, 21 Dec 2020 1:55:43 PM

ரஜினிகாந்தின் அரசியல் பயணம் நிச்சயம் வெற்றியில் முடியும்; ரசிகர்களின் நம்பிக்கை

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31-ம் தேதி புதிய கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் தொடங்க உள்ள புதிய கட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசியல் களத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தருவேன் என்றும், “மாத்தணும், எல்லாத்தையும் மாத்தணும், இப்போ இல்லைன்னா எப்போதும் இல்லை” என்பது போன்ற கோ‌ஷங்களை முன்னெடுத்துள்ள ரஜினிகாந்தின் அரசியல் பயணம் நிச்சயம் வெற்றியில் முடியும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்ற பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளன. பூத் கமிட்டிகளை அமைப்பது, ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிதாக ஆட்களை சேர்ப்பது போன்ற பணிகளை மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் ரஜினியின் அரசியலை “ரஜினியி‌ஸம்” என்ற பெயரில் மக்கள் மத்தியில் மன்ற நிர்வாகிகள் பிரபலப்படுத்தி வருகிறார்கள். ரஜினியின் புதிய கட்சியில், மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எதிராக புதிய மாற்றத்தை விரும்புபவர்களும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

election,politics,party,fans,anticipation ,தேர்தல்,அரசியல்,கட்சி,ரசிகர்கள்,எதிர்பார்ப்பு

ரஜினிகாந்த் கடந்த 3-ம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த பிறகு பல்வேறு தரப்பினரும் ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்து வருகிறார்கள். அதி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் ரஜினியின் ரசிகர்களாக இருந்தவர்களும், பழைய எம்.ஜி.ஆர். ரசிகர்களும் ரஜினி கட்சியில் சேர முனைப்பு காட்டி வருகிறார்கள். வருகிற 31-ம் தேதி ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிறகு புத்தாண்டில் மதுரை அல்லது திருச்சியில் கட்சியின் தொடக்க விழா பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் புதிதாக பிறக்கும் 2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்புடனேயே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளை தாண்டி, பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும், பெண்கள் அமைப்பினரும் ரஜினியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுபோன்று கட்சியில் சேர விரும்புபவர்கள் ‘கறை’ படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்களா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ரஜினிகாந்த், மன்ற நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

Tags :
|
|