Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் வேகமாக குறைந்துவரும் கொரோனா தொற்று பாதிப்பு

புதுச்சேரியில் வேகமாக குறைந்துவரும் கொரோனா தொற்று பாதிப்பு

By: Monisha Sun, 20 Dec 2020 1:12:50 PM

புதுச்சேரியில் வேகமாக குறைந்துவரும் கொரோனா தொற்று பாதிப்பு

புதுச்சேரி யூனியனில் தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. உயிர்ப்பலியும் தொடர்ந்தது. இந்தநிலையில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

நேற்று காலை 10.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 126 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 73 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

curfew,relaxation,corona,test,cure ,ஊரடங்கு,தளர்வு,கொரோனா,பரிசோதனை,குணம்

ஒட்டுமொத்தமாக இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரத்து 501 பேருக்கு தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 468 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 37 ஆயிரத்து 775 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 201 பேர் ஆஸ்பத்திரியிலும், 138 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை 36 ஆயிரத்து 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 624 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 511 பேர் புதுச்சேரியையும், 45 பேர் ஏனாமையும், 8 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள். புதுச்சேரியில் உயிரிழப்பு 1. 65 சதவீதமாகவும் குணமடைவது 97.45 சதவீதமாகவும் உள்ளது.

Tags :
|
|
|