Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவுடன் தீர்க்கமான பேச்சுக்கு தயார்; தாய்வான் ஜனாதிபதி அறிவிப்பு

சீனாவுடன் தீர்க்கமான பேச்சுக்கு தயார்; தாய்வான் ஜனாதிபதி அறிவிப்பு

By: Nagaraj Sat, 10 Oct 2020 10:18:15 PM

சீனாவுடன் தீர்க்கமான பேச்சுக்கு தயார்; தாய்வான் ஜனாதிபதி அறிவிப்பு

பிராந்திய அமைதிக்காக சீனாவுடன் தீர்க்கமான பேச்சுக்குத் தயார் என்று தாய்வான் தெரிவித்துள்ளது. தாய்வானின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் பிராந்திய பங்காளிகளுடன் பாதுகாப்பு தொடர்பாக மிக நெருக்கமாக பணியாற்றவுள்ளதாக ஜனாதிபதி சாய் இங்-வென் (Tsai Ing-wen) அறிவித்துள்ளார்.

தாய்வானின் தேசிய தினத்தையடுத்து இன்று (சனிக்கிழமை) உரையாற்றிய அவர், தீவின் பாதுகாப்புத் திறன்களை நவீனமயமாக்குவதோடு, தாய்வான் நீரிணையைப் பாதுகாக்கும் போருக்கான திறனை மேம்படுத்தவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் முக்கியமாக, பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான சீனாவின் செயற்பாடுகளால் தாய்வான் அதிருப்தியடைந்துள்ள நிலையில் சீனாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு தயார் என சீனாவுக்கு தாய்வான் அழைப்பு விடுத்துள்ளது.

taiwan,usa,japan,canada,assistance ,தாய்வான், அமெரிக்கா, ஜப்பான், கனடா, உதவி

மேலும், தாய்வானின் மத்திய ஜலசந்தியில் பதற்றத்தைத் தடுக்க தீர்க்கமான பேச்சுவார்த்தை அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சீன அதிகாரிகள் விரோதங்களைத் தீர்ப்பதற்கும் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதற்கும் சமத்துவம் பேணும் வகையில் தயாராகினால் அவர்களுடன் பூரண பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இருப்பதாக தாய்வான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சீனா தனது சொந்த பிரதேசம் என சுயாட்சி கொண்ட தாய்வான் தீவை கோரிவரும் நிலையில் தாய்வான் அரசாங்கம் பீஜிங்கிலிருந்து அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றது. அத்துடன், தாய்வானின் மத்திய ஜலசந்திப் பகுதியில் சீனா பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகளையும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த விடயம் உலக நாடுகளை ஈர்த்துள்ளதுடன் தாய்வானுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான், கனடா போன்ற நாடுகள் அதிக கரிசனை கொண்டுள்ளன. மேலும், தாய்வானுக்கு பாதுகாப்பு தொடர்பான உதவிகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|