Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லையில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் - பாராளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் அதிரடி பேச்சு

எல்லையில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் - பாராளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் அதிரடி பேச்சு

By: Karunakaran Wed, 16 Sept 2020 2:43:20 PM

எல்லையில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் -  பாராளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் அதிரடி பேச்சு

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நீண்ட இடைவெளிக்கு பின் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தொடரில் சீனாவுடனான மோதலில் லடாக் எல்லையில் இந்திய 20 பேர் வீரமரணம் அடைந்தது தொடர்பாகவும், சீனாவுடனான எல்லைப்பிரச்சனை தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது. இதற்கு இந்தியா பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாராளுமன்றத்தில் பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், இந்தியா-சீனா இடையேன எல்லைப்பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. தற்போதுவரை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகவில்லை. எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையான எல்லைக்கோடு பகுதியை தன்னிச்சையாக மாற்றியமைப்பது இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறும் செயல் என சீனாவிடம் தூதரக ரீதியாக தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

ladakh border,china attack,rajnath singh,parliament ,லடாக் எல்லை, சீனா தாக்குதல், ராஜ்நாத் சிங், நாடாளுமன்றம்

இரு நாட்டு எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகிலும், உள்பகுதியிலும் சீனா ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக எல்லைப்பகுதியில் இந்தியாவும் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது. எல்லையில் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க நாம் தயாராக உள்ளோம் என்பதை நான் உங்களிடம் உறுதியளிக்கிறேன். இந்திய ராணுவத்தின் மன உறுதி அதிகமாக உள்ளது என்பதை நான் உங்களிடம் இங்கு உறுதியளிக்கிறேன் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

மேலும் அவர், வீரர்களின் ஈடுபாடு எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு நிலைமை சற்று வித்தியசமான சூழ்நிலை ஆகும். பிரச்சனையை அமைதியான முறையில் தீர்ப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா இடையேயான உறவு மேம்பட எல்லையில் அமைதி மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறினார்.

Tags :