Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய வகை கொரோனா வைரஸ் சவாலையும் எதிர்கொள்ள தயார் - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதிய வகை கொரோனா வைரஸ் சவாலையும் எதிர்கொள்ள தயார் - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

By: Monisha Tue, 29 Dec 2020 08:29:43 AM

புதிய வகை கொரோனா வைரஸ் சவாலையும் எதிர்கொள்ள தயார் - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதிய வகை கொரோனா வைரஸ் வந்தாலும், அந்த சவாலையும் சிறப்பாகவே அரசு எதிர்கொண்டு வெற்றியடையும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

லண்டனில் இருந்து வந்த பயணிகளில் 13 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 15 பேர் என 28 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக லண்டனில் இருந்து வந்திருந்தவர்கள் விவரம் முழுவதும் இ-பாஸ் நடைமுறை காரணமாக அரசிடம் முழுமையாக இருக்கிறது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. தேனியில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் கூட நேரடியாக லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் அல்ல. பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக தமிழகம் வந்தவர்கள் தான்.

minister,c. vijayabaskar,corona virus,challenge,vaccine ,அமைச்சர்,சி.விஜயபாஸ்கர்,கொரோனா வைரஸ்,சவால்,தடுப்பூசி

பாதிப்புக்குள்ளானவர்களின் மாதிரிகள் புனேவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

இந்தியாவில் இன்னும் தடுப்பூசி வரவில்லை. இங்கிலாந்தில்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள். கொரோனாவாக இருந்தாலும், உருமாறிய அந்த வைரசாக இருந்தாலும் சரி அதை தடுத்து நிறுத்தும் ஆயுதம் முககவசம்தான். மக்கள் நலனுக்காகவே புத்தாண்டு கொண்டாட்டத்தையே தடை செய்துள்ளோம். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதே இப்போதையே தேவை.

புதிய வகை கொரோனா வைரஸ் வந்தாலும், அந்த சவாலையும் சிறப்பாகவே அரசு எதிர்கொண்டு வெற்றியடையும் என்று கூறினார்.

Tags :