Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புரெவி புயல் எதிரொலி: தமிழகத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை

புரெவி புயல் எதிரொலி: தமிழகத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை

By: Monisha Wed, 02 Dec 2020 12:13:54 PM

புரெவி புயல் எதிரொலி: தமிழகத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை

வங்க கடலில் நிவர் புயலின் தொடர்ச்சியாக மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது. இதையடுத்து நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. புரெவி புயல், பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

burevi storm,red alert,warning,strong wind,heavy rain ,புரெவி புயல்,ரெட் அலர்ட்,எச்சரிக்கை,பலத்த காற்று,கனமழை

புரெவி புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. குமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். வட தமிழகத்தில் 4ந்தேதி ஒரு சில இடங்களில் மழை பெய்யும். குமரி, நெல்லை, தென்காசி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :