Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனகா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை முடிவு வெளியீடு

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனகா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை முடிவு வெளியீடு

By: Nagaraj Wed, 09 Dec 2020 10:17:33 AM

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனகா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை முடிவு வெளியீடு

70 சதவீதம் பயன்... உலகளவில் முதன் முதலாக ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனகா தங்கள் தடுப்பூசியின் இறுதி கட்ட பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அத்தடுப்பூசி ஒட்டுமொத்தமாக 70% பயனளிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராசெனகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு எனும் தடுப்பு மருந்தை தயாரித்தன. கடந்த 8 மாதங்களாக இத்தடுப்பூசி 3 கட்டங்களாக உலகம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டது.

அதன் இடைக்கால பரிசோதனை அலசல்கள் லான்செட் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரேசிலைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் 2 கட்டங்களாக தடுப்பூசி செலுத்தி பரிசோதித்ததன் மூலம் கிடைத்த தகவல்கள் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தடுப்பூசி 70% பயனளிப்பதாக தகவல்களை ஆய்வு செய்த வெளி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தடுப்பூசி பெற்றவர்களை 2 குழுக்களாக பிரித்தனர். ஒரு குழுவுக்கு வழக்கமான மருந்தும் அதனைத் தொடர்ந்து பூஸ்டர் மருந்தும் வழங்கப்பட்டது. 2-வது குழுவுக்கு முதலில் குறைந்த அளவு தடுப்பூசி தந்துள்ளனர்.

covshield,production,70 percent use,approval,emergency treatment ,கோவிஷீல்டு, உற்பத்தி, 70 சதவீதம் பயன், ஒப்புதல், அவசர சிகிச்சை

ஒட்டுமொத்தமாக தடுப்பூசி 70% பயனளிப்பதாக தகவல்களை ஆய்வு செய்த வெளி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தடுப்பூசி பெற்றவர்களை 2 குழுக்களாக பிரித்தனர். ஒரு குழுவுக்கு வழக்கமான மருந்தும் அதனைத் தொடர்ந்து பூஸ்டர் மருந்தும் வழங்கப்பட்டது. 2-வது குழுவுக்கு முதலில் குறைந்த அளவு தடுப்பூசி தந்துள்ளனர்.

பின்னர் வழக்கமான தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குறைந்த அளவு தடுப்பூசி பெற்ற 2-வது குழு 90 சதவிகித செயல்திறனைக் காட்டியது. அதே சமயம் முதலில் வழக்கமான மருந்து வழங்கப்பட்ட குழுவினரிடம் 62.1 சதவிகித செயல்திறனே காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக 2 டோஸ் மருந்து அளிக்கப்பட்டவுடன் 70% பேர் கொரோனா அறிகுறிகளில் இருந்து தப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிஷீல்டு மருந்தை சீரம் இந்தியா நிறுவனம் கோடிக் கணக்கில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

Tags :