Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீக்கம்

கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீக்கம்

By: Monisha Fri, 25 Sept 2020 4:33:02 PM

கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீக்கம்

சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கையின் காரணமாக சென்னையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கடந்த 21 நாட்களாக பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது 1,089 ஆக அதிகரித்துள்ளது. 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் ஆயிரத்துக்கும் குறைவாக மொத்த பாதிப்பு இருந்து வருகிறது. கோடம்பாக்கம், அண்ணா நகர் பகுதியில் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமாக தொற்று பரவல் இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைக்கப்பட்டன. தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக தெருக்கள் சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆனால் பின்னர் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தகரம் அடித்தல் தடுப்பு வேலிகள் அமைத்தல் போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

corona virus,chennai,corporation,vulnerability,control areas ,கொரோனா வைரஸ்,சென்னை,மாநகராட்சி,பாதிப்பு,கட்டுப்பாட்டு பகுதிகள்

கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டு பகுதிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 16-ந்தேதி நிலவரப்படி மாதவரம் மண்டலத்தில் மட்டுமே 4 இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டன. மற்ற எந்த மண்டலத்திலும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் அந்த கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் மாநகராட்சி முழுமையாக நீக்கியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஜெகதீசன் கூறும்போது:-

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தற்போது நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் முழுமையாக இல்லை. நோய் தொற்று நேற்று அதிகரித்த போதிலும் புதிய கட்டுப்பாட்டுப் பகுதிகள் அறிவிக்கப்படவில்லை. சென்னையில் உள்ள எந்த தெருக்களிலும் 3 இலக்க பாதிப்பு இல்லை. அதனால் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்றார்.

Tags :