Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கட்டுப்பாடுகள் இல்லாமல் பொது முடக்கத்தை நீக்குவது பேரழிவை ஏற்படுத்தும்

கட்டுப்பாடுகள் இல்லாமல் பொது முடக்கத்தை நீக்குவது பேரழிவை ஏற்படுத்தும்

By: Nagaraj Tue, 01 Sept 2020 6:24:52 PM

கட்டுப்பாடுகள் இல்லாமல் பொது முடக்கத்தை நீக்குவது பேரழிவை ஏற்படுத்தும்

பேரழிவுக்கு வழிவகுக்கும்... கட்டுப்பாடுகள் இல்லாமல் பொதுமுடக்கத்தை திறப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் உலக அளவில் அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதனால் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

general freeze,restrictions,disaster,health system ,பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள், பேரழிவு, சுகாதார அமைப்பு

கொரோனா பரவல் நிலைமைகளைப் பொருத்து அவ்வப்போது பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளதாவது: கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் விடாமுயற்சியுடன் செயல்படவேண்டும். குழந்தைகள் பள்ளிக்குத் திரும்புவதையும், மக்கள் பணியிடங்களுக்குத் திரும்புவதையும் நாம் விரும்பினாலும் அது பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும்.

உரியக் கட்டுப்பாடுகள் இல்லாமல் பொதுமுடக்கத்தைத் தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும். எந்தவொரு நாடும் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டதாக பொய்யாகக் கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :