Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று உயர்வு குறித்து அறிக்கை

விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று உயர்வு குறித்து அறிக்கை

By: Nagaraj Thu, 30 July 2020 5:10:22 PM

விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று உயர்வு குறித்து அறிக்கை

ஆஸ்திரேலியாவில் வைரஸ் பாதிப்புக்குள்ளான விக்டோரியா மாநிலம், அதன் மிக மோசமான இறப்பு எண்ணிக்கை மற்றும் தொற்று உயர்வு குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) 13 புதிய இறப்புகள் மற்றும் 723 புதிய தொற்றுகளை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்ட தொற்றுகளின் அளவை விட இது 36 சதவீதம் உயர்வு.

victoria,corona,virus,vulnerability,test ,விக்டோரியா, கொரோனா, வைரஸ், பாதிப்பு, சோதனை

இதனால், கடந்த ஜூலை 7ஆம் திகதி மெல்பேர்னின் அமுல்படுத்திய ஆறு வார முடக்கநிலையை நீடிக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு விரைவாக பரிசோதனை செய்ய தீர்மானித்துள்ளனர்.

விக்டோரியா முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறுகையில், ‘உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால், நீங்கள் செய்யக்கூடிய ஒரே விட்யம் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீங்கள் வேலைக்குச் செல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் செய்வதெல்லாம் வைரஸைப் பரப்புவதாகும்’ என கூறினார்.

Tags :
|
|