Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 20வது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை

20வது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை

By: Nagaraj Mon, 19 Oct 2020 9:18:33 PM

20வது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை

ஒத்தி வைக்க கோரிக்கை.... இந்த வாரம் நடைபெறவிருக்கும் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 20 வது திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடாளுமன்றில் அறிவித்ததை அடுத்து அதன் மீதான விவாதம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால், கூட்டங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் சமூக விலகல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

adjournment,parliamentary session,rules,question ,ஒத்தி வைப்பு, நாடாளுமன்ற அமர்வு, விதிமுறை, கேள்வி

எனவே, கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் நேரத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது சுகாதார விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தை இயற்றும் ஸ்தாபனமே சட்டத்தை மீறுகிறது என்றால் மக்களுக்கு காட்டப்படும் உதாரணம் என்ன என்று லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

ஆகவே இந்த வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்ற அமர்வு அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|