Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கால்நடை வளர்ப்பு பகுதியில் விலங்கிடப்பட்டு இருந்த சிறுவன் மீட்பு

கால்நடை வளர்ப்பு பகுதியில் விலங்கிடப்பட்டு இருந்த சிறுவன் மீட்பு

By: Nagaraj Mon, 17 Aug 2020 9:58:19 PM

கால்நடை வளர்ப்பு பகுதியில் விலங்கிடப்பட்டு இருந்த சிறுவன் மீட்பு

ஆடு, கோழிகள் வளர்க்கப்படும் பகுதியில் மரமொன்றில் விலங்கிடப்பட்டிருந்த சிறுவனொருவனை மனித உரிமை ஆர்வலர்கள் மீட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் ஜைீரியாவின் கெப்பி மாநிலத்தில் நடந்துள்ளது.

தாயார் இறந்த பின்னர், மாற்றாந்தாயால் சிறுவனிற்கு இந்த கொடுமை நேர்ந்தது. 10 வயதுடைய ஜிப்ரில் அலியு என்ற சிறுவன், மரத்தூணுடன் கட்டப்பட்டிருந்தான். பண்ணை கொட்டகைக்கு அருகிலுள்ள பங்களா வீட்டில் தனது 2 மனைவிமார், 17 பிள்ளைகளுடன், சிறுவனின் தந்தை வசித்து வந்தார்.

சிறுவன் இரண்டு வருடங்களாக பண்ணை கொட்டகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். மனித உரிமை ஆர்வலர்களால் சிறுவன் மீட்கப்பட்ட வீடியோ காட்சி மனதை உடைய வைக்கும் விதமாக அமைந்திருந்தது. நீண்டகாலமாக உட்கார்ந்திருந்ததால், சிறுவனால் எழுந்து நிற்க முடியவில்லை. மனிதநேய பணியாளர் ஒருவர் பெரு முயற்சி செய்தே சிறுவனை எழுந்து நிற்க வைத்தார்.

shed,chain,boy,nigeria,rescue ,கொட்டகை, சங்கிலி, சிறுவன், நைஜீரியா, மீட்பு

ஆடுகள், கோழிகளுடன் வாழ்ந்த சிறுவன் ஜிப்ரில் அதிகமாக மனிதர்களுடன் பழகியிருக்கவில்லை. தன்னை மீட்க வந்த மனிதநேய பணியாளர்களை கண்டு அச்சமடைந்தான். பின்னர் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சிறுவன் சங்கிலியிலிருந்து விடுவிக்கப்பட்டதும், அருகில் சாப்பிட ஏதாவது இருக்கிறதா என தேடும் காட்சியும் பதிவாகியுள்ளது. போதிய உணவின்றி, சிறுவன் எலும்பும் தோலுமாக இருந்தான். மணீர் ஜெகா அறக்கட்டளையை நடத்தி வரும் மணீர் என்பவர், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவனின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார். அவரே சிறுவனை மீட்டார்.

“சிறுவனின் தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். சிறுவனுக்கு தங்குமிடம், உடை, உணவு, சுகாதாரப் பாதுகாப்பு பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்களால் அவர் மீட்கப்படும் வரை, அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். விலங்குகளின் மீதமுள்ள உணவை உண்பதுடன், தனது மலத்தைக் கூட சாப்பிட்டுள்ளான்.

shed,chain,boy,nigeria,rescue ,கொட்டகை, சங்கிலி, சிறுவன், நைஜீரியா, மீட்பு

கொடூரமான மற்றும் மோசமான சித்திரவதையின் விளைவாக, ஒரு மிருகத்தைப் போலவே தனது புலன்களையும் நடத்தைகளையும் இழந்து விட்டான். மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், சிறுவன் இந்த மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டபோது அந்த வீட்டில் சிறுவனின் தந்தையும் வசித்து வந்ததுதான்.

சிறுவனின் தந்தை, அவரது இரண்டு மனைவிமார் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் முழுமையான சட்ட விசாரணையை எதிர்கொள்ள கெப்பி மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்“ என்றார்.

ஜிப்ரிலின் மூத்த சகோதரர்களில் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் தனது உடன்பிறப்பு கால்-கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். அவர் அலைந்து திரிவதைத் தடுக்க, அவரது குடும்பத்தினர் சிறுவனை வெளியே கொட்டகையில் சங்கிலியால் கட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|