Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கையை மதிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத்

தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கையை மதிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத்

By: Karunakaran Sat, 14 Nov 2020 6:35:10 PM

தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கையை மதிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத்

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.

அதில், தீபாவளி பண்டிகை கொண்டாடும் இந்த புனிதமான நாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி மற்றும் ஒளியின் இந்த பண்டிகையானது, ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும் என்று கூறியுள்ளார்.

diwali,india,president,ramnath govind ,தீபாவளி, இந்தியா, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த்

மேலும், மனிதநேய சேவைக்காக உழைப்பதற்கு பண்டிகை தூண்டுகிறது. இந்த நன்னாளில், ஒரு விளக்கு அதன் ஒளியைப் பகிர்வதன் மூலம் பல விளக்குகளை ஒளிரச் செய்வது போலவே, நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஏழை, ஆதரவற்ற மக்களுக்கு நம்பிக்கை மற்றும் செழிப்பின் விளக்காக மாற உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளி என்பது தூய்மையின் பண்டிகையும் ஆகும். எனவே மாசு இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கையை மதிப்போம் என்று கூறி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீபாவளி வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Tags :
|
|