Advertisement

தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

By: Monisha Sat, 22 Aug 2020 4:55:38 PM

தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் தோவாளை மார்க்கெட்டில் சில வகை பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது. தோவாளையில் ஆவணிமாதம் பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெறும். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக சமூக இடைவெளியுடன் பூக்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும்.

கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகையையொட்டி ஏராளமானோர் தோவாளைக்கு வந்து பூக்களை வாங்கி செல்வார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக கேரள வியாபாரிகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், எல்லையோரத்தில் உள்ள வியாபாரிகள் அதிகளவு வந்து பூக்களை வாங்கி செல்கிறார்கள்.

market,flowers,price,ganesha chaturthi ,தோவாளை,மார்க்கெட்,பூக்கள்,விலை,விநாயகர் சதுர்த்தி

ஆவணி மாதம் அடுத்தடுத்து முகூர்த்த தினங்கள் வருவதாலும், இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதாலும் பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் நேற்று தோவாளை மார்க்கெட்டில் சில வகை பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.350-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ நேற்று ரூ.275 உயர்ந்து ரூ.625-க்கு விற்பனையானது. இதுபோல், முல்லை கிலோ ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்தது.

தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:- கனகாம்பரம் ரூ.1000, அரளிப்பூ ரூ.180, மல்லிகை ரூ.500, வாடாமல்லி ரூ.70, சம்பங்கி ரூ.125, ரோஜா (100 எண்ணம்) ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.230, துளசி ரூ.30, தாமரை (100 எண்ணம்) 500, பச்சை ரூ.6, கோழிப்பூ ரூ.60, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.150, மஞ்சள் கேந்தி ரூ.60, மஞ்சள் சிவந்தி 180, வெள்ளை சிவந்தி ரூ.200, ஸ்டெம்புரோஸ் (1 கட்டு) ரூ.220 என விற்பனையானது.

Tags :
|
|