Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் துறைமுகத்தில் சிக்கியது!

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் துறைமுகத்தில் சிக்கியது!

By: Monisha Sat, 21 Nov 2020 08:57:34 AM

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் துறைமுகத்தில் சிக்கியது!

தூத்துக்குடியில் இருந்து துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் சிக்கியது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு லாரியில் 40 அடி நீளம் கொண்ட கன்டெய்னர் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகே உள்ள சரக்கு பெட்டக முனையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த கன்டெய்னரில், துபாய் ஜெபல்அலி துறைமுகத்துக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.

thoothukudi,abroad,smuggling,sandalwood,port ,தூத்துக்குடி,வெளிநாடு,கடத்தல்,செம்மரக்கட்டைகள்,துறைமுகம்

உடனே மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த கன்டெய்னரை பரிசோதனை செய்தனர். அதில் முன்பகுதியில் தேங்காய் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த மூட்டைகளுக்கு நடுவில் செம்மரக்கட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

அதில் சுமார் 16 டன் செம்மரக்கட்டைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் 16 டன் செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த செம்மரக்கட்டைகளை கடத்தியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|