Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திறந்த ஒரே நாளில் ரூ.163 கோடி மதுபானங்கள் விற்பனை; மதுரை முதலிடம்

திறந்த ஒரே நாளில் ரூ.163 கோடி மதுபானங்கள் விற்பனை; மதுரை முதலிடம்

By: Nagaraj Sun, 17 May 2020 6:26:19 PM

திறந்த ஒரே நாளில் ரூ.163 கோடி மதுபானங்கள் விற்பனை; மதுரை முதலிடம்

ரூ.163 கோடி மதுபானங்கள் விற்பனை... தமிழகத்தில் நேற்று (மே 16) திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த மே 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, மே 9ம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

brewery,sale,madurai,salem,trichy,rs 163 crore ,மதுபானம், விற்பனை, மதுரை, சேலம், திருச்சி, ரூ.163 கோடி

அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதியளித்தது. அதன்படி, நேற்று (மே 16) முதல் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன.

மது வாங்குவோருக்கு 7 நிறங்களில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று (மே 16) மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.5 கோடிக்கும், கோவையில் ரூ.33.05 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|
|