Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்; முதல்வர் அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்; முதல்வர் அறிவிப்பு

By: Monisha Mon, 09 Nov 2020 09:44:37 AM

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்; முதல்வர் அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் தாலுகா தெற்குமயிலோடை மஜராதலையால் நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.

இதேபோன்று, கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சிறுவன் சந்தியாகு, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா தென்மழையூர் கருப்பையா, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா அண்ணாமலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சுரேன், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசேகர் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

electricity,loss of life,relief fund,edappadi palanisamy,sympathy ,மின்சாரம், உயிரிழப்பு,நிவாரண நிதி,எடப்பாடி பழனிசாமி,அனுதாபம்

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேன் என்பவர் லாரியில் மூட்டைகளை ஏற்றும் பணியின் போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சோழிங்கநல்லூரை அடுத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த பாபு, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா சுண்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்திகளைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :