Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 3 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ரஷியா திட்டம்

3 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ரஷியா திட்டம்

By: Karunakaran Thu, 16 July 2020 6:59:27 PM

3 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ரஷியா திட்டம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுடிபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனைகள் இருந்து வருவதால், கொரோனா தடுக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்போது, கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது ரஷியா. 38 மனிதர்களுக்கு முதற்கட்ட மனித பரிசோதனையை மேற்கொண்ட ரஷியா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதை கண்டறிந்துள்ளது.

corona vaccine,russia,corona virus,corona prevalence ,கொரோனா தடுப்பூசி, ரஷ்யா, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்களிடையே 3-ம் கட்ட பரிசோதனையை ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய அளவில் தொடங்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த சோதனை அடிப்படையில் 3 கோடி டோஸ் தயாரிக்கப்பட்டு உள்நாட்டில் பயன்படுத்தப்படவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் நேரடி நிதி முதலீடு தலைவர் கிரில் டிமிட்ரோவ் கூறுகையில், முதற்கட்ட பரிசோதனை முடிவுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் உள்நாட்டில் பயன்படுத்த ரஷியா ஒப்பதல் வழங்கும் என்றும் நம்புகிறோம். மற்ற சில நாடுகளுக்கு செப்டம்பர் மாதம் வழங்கப்படலாம். இது உலகில் அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி என்ற பெருமையை பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags :
|