Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும் வீடியோவை வெளியிட்ட சச்சின் பைலட்

தனக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும் வீடியோவை வெளியிட்ட சச்சின் பைலட்

By: Karunakaran Tue, 14 July 2020 10:12:24 AM

தனக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும் வீடியோவை வெளியிட்ட சச்சின் பைலட்

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கு இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் உள்ளது.

ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வாக்குமூலம் அளிக்க முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரிக்கு மாநில போலீசார் நோட்டீஸ் அனுப்பியபின் இந்த மோதல் பயங்கரமாக வெடித்தது. போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் அசோக் கெலாட், சச்சின் பைலட்டை அவமானப்படுத்துவதற்காகவே இந்த நோட்டீசை அனுப்ப வைத்ததாக சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.

sachin pilot,rajastan,congress,30 mlas ,சச்சின் பைலட், ராஜஸ்தான், காங்கிரஸ், 30 எம்.எல்.ஏ.

இந்நிலையில், தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார். இருப்பினும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-மந்திரிக்கே ஆதரவாக இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோவில் சச்சின் பைலட் இல்லை. இருப்பினும் சில எம்.எல்.ஏக்கள் கேமராவை நோக்கி பேசினர். மேலும் வீடியோ எடுக்கப்பட இடம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Tags :