Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜகவில் சேர மாட்டேன் என சச்சின் பைலட் கருத்து கூறியது நல்ல முடிவு - வீரப்ப மொய்லி

பாஜகவில் சேர மாட்டேன் என சச்சின் பைலட் கருத்து கூறியது நல்ல முடிவு - வீரப்ப மொய்லி

By: Karunakaran Fri, 17 July 2020 11:23:27 AM

பாஜகவில் சேர மாட்டேன் என சச்சின் பைலட் கருத்து கூறியது நல்ல முடிவு - வீரப்ப மொய்லி

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்க்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால், சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்-மந்திரி பதவியும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சச்சின் பைலட் பாஜகவில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ராஜஸ்தானில் பா.ஜனதாவை தோற்கடிக்க பாடுபட்ட நான் பா.ஜனதாவில் இணைவேனா?. சிலர் தேவையின்றி நான் பா.ஜனதாவில் சேர உள்ளதாக வதந்தி கிளம்புகின்றனர். நான் அந்த கட்சியில் சேர மாட்டேன் என சச்சின் பைலட் இவற்றிற்கு பதிலளித்தார்.

sachin pilot,bjp,veerappa moily,congress ,சச்சின் பைலட், பாஜக, வீரப்ப மொய்லி, காங்கிரஸ்

தற்போது சச்சின் பைலட் கருத்து குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், சச்சின் பைலட் இளம்வயதிலேயே மத்திய மந்திரி, நாடாளுமன்ற உறுப்பினர், துணை முதல்-மந்திரி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பெற்று உள்ளார். இந்த நிலையில் அவர் ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு எதிராக செயல்பட்டது சரியல்ல என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், ராஜஸ்தான் அரசியலில் சச்சின் பைலட்டுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. துணை முதல்-மந்திரி, காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்ட நிலையிலும் சச்சின் பைலட் பா.ஜனதாவில் சேர மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் எடுத்த மிக சரியான, நல்ல முடிவு என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்

Tags :
|