Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கத்தாரில் உள்ள பண்ணையில் குங்குமப்பூ அறுவடை பணி தொடக்கம்

கத்தாரில் உள்ள பண்ணையில் குங்குமப்பூ அறுவடை பணி தொடக்கம்

By: Nagaraj Mon, 23 Nov 2020 9:38:28 PM

கத்தாரில் உள்ள பண்ணையில் குங்குமப்பூ அறுவடை பணி தொடக்கம்

கத்தாரில் உள்ள பண்ணை ஒன்றில் நேற்று முதன்முறையாக குங்குமப்பூ அறுவடை செய்ய தொடங்கியுள்ளது. இதில் 25 சதவீதம் உள்ளூர் சந்தை பங்களிப்பைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் வடக்கே உள்ள Um Lushoosh பகுதியில் அமைந்துள்ள Saffron கத்தாரில் நேற்று குங்குமப்பூ அறுவடை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் கத்தார் chamber மற்றும் hassad உணவு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

saffron,production,harvesting,modern technology ,குங்குமப்பூ, உற்பத்தி, அறுவடை, நவீன தொழில்நுட்பம்

பொதுவாக குங்குமப்பூ போன்ற தாவரங்கள் ஈரான், மொரோக்கோ, ஆப்கானிஸ்தான், ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளில் காணப்படுவதால் கத்தாரில் முதல் குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் பண்ணையைத் திறந்து வைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று பண்ணையின் உரிமையாளர் Jaber Al Mansouri தெரிவித்துள்ளார்.

இந்த பண்ணையில் குங்குமப்பூவை வளர்ப்பதற்கு hydroponic soilless போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்துகிறது. மேலும், உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்காக உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை விரிவுபடுத்த விரும்புகிறோம் என்றும் கத்தார் சந்தை தேவைகளில் 25% பூர்த்தி செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் Jaber Al Mansouri கூறியுள்ளார்.

Tags :