Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு

நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு

By: Monisha Mon, 19 Oct 2020 4:25:15 PM

நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு

நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவில்கள் மற்றும் மக்கள் வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். இந்த கொலுவில் கடவுள் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொம்மைகளை வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள்.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி மக்கள் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைத்து உள்ளனர். இதனால் தூத்துக்குடியில் சில கடைகளில் விற்பனைக்காக ஏராளமான கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த பொம்மைகள் காஞ்சீபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளன.

navratri,kolu bommai,sale,public ,நவராத்திரி,கொலு பொம்மைகள்,விற்பனை,பொதுமக்கள்

இங்கு ரூ.10 முதல் ரூ.10 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அஷ்டலட்சுமி, தசரா, திருமண நிகழ்ச்சி, வளைகாப்பு நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் பொம்மைகள் உள்ளன. சுமார் 5 ஆயிரம் வகையான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

கொரோனா காலத்திலும் கொலு பொம்மைகள் விற்பனை வழக்கம் போல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பொம்மைகள் அதிக அளவில் விற்பனையாகி உள்ளன. பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து ஆர்வமுடன் கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.

Tags :
|