Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் - சஞ்சய் நிருபம்

சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் - சஞ்சய் நிருபம்

By: Karunakaran Mon, 28 Sept 2020 4:29:56 PM

சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் - சஞ்சய் நிருபம்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பாரதிய ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் பிரிந்தது. பின் சிவசேனா கொள்கை வேறுபாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கைகோர்த்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது. தற்போது அங்கு சிவசேனா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அரசை அமைக்க காரணமாக இருந்தவர் சஞ்சய் ராவத்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிசை சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் தேவேந்திர பட்னாவிசை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பற்றி மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் கருத்து தெரிவித்துள்ளார்.

sanjay rawat,political career,sanjay nirupam,congress ,சஞ்சய் ராவத், அரசியல் வாழ்க்கை, சஞ்சய் நிருபம், காங்கிரஸ்

சஞ்சய் நிருபம் கூறுகையில், தலைப்பு செய்திகளில் இடம்பெற சஞ்சய் ராவத் அவசரம் காட்டுகிறார். அது நடக்கும்போது அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் என்றும், ஆனால் இது எனது தவறான விருப்பம் அல்ல, அது உண்மை. வேளாண் மசோதாக்களை காங்கிரஸ் தீவிரமாக எதிர்ப்பதாக இருந்தால், முதலில் கூட்டணி கட்சியான சிவசேனாவின் நிலைப்பாட்டை கேட்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், இந்த மசோதாக்களை பற்றி உத்தவ் தாக்கரே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மக்களவையில் வேளாண் மசோதாக்களுக்கு சிவசேனா ஆதரவு அளித்தது. மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டபோது, அக்கட்சி வெளிநடப்பு செய்தது. மராட்டிய விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

Tags :