Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுல் காந்தியை விமர்சனம் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பவார்

ராகுல் காந்தியை விமர்சனம் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பவார்

By: Karunakaran Sat, 05 Dec 2020 10:36:18 AM

ராகுல் காந்தியை விமர்சனம் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பவார்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா எழுதிய சுயசரிதை நூலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பற்றி, ராகுல் காந்தி பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார். மாணவரை போல் பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய விருப்பமோ அல்லது தகுதியோ இல்லாதவராக இருக்கிறார் என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்திய நாட்டு தலைவரை பற்றி வெளிநாட்டு தலைவரான ஒபாமா கருத்து கூறியதை கடுமையாக கண்டித்தது. இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராகுல் காந்தியை விமர்சனம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

sarath pawar,rahul gandhi,congress,maharastra ,ஷரத் பவார், ராகுல் காந்தி, காங்கிரஸ், மகாராஷ்டிரா

முன்னாள் எம்.பி. விஜய் தார்தா சரத்பவாரிடம் பேட்டி கண்டபோது சரத்பவாரிடம், ராகுல் காந்தியை நாட்டை வழிநடத்தும் தலைவராக இந்த தேசம் ஏற்றுக்கொள்ளுமா? எனக் கேட்டார். அதற்கு சரத்பவார் பதிலளிக்கையில், இது தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன. அவர் இன்னும் பக்குவம் பற்றாக்குறை உள்ளவராக தான் தோன்றுகிறது என்று கூறினார். மேலும், ராகுல் காந்தி பற்றி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா என்னை பொருத்தவரை ஒபாமா எல்லை மீறி பேசிவிட்டார் என கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் மற்றும் கட்சிக்கு ராகுல் காந்தி தடையாக இருக்கிறாரா என்று கேட்கப்பட்டதற்கு, சரத்பவார் பதிலளிக்கையில், எந்த ஒரு கட்சியின் தலைவரும் கட்சியின் அமைப்புக்குள் என்ன விதமான தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ, அதைப்பொருத்தே எதிர்காலம் அமையும். எனக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் குடும்பம் இடையே வேறுபாடு இருந்தது. ஆனால், இன்றும் காங்கிரஸ் தொண்டர்கள் காந்தி- நேரு குடும்பத்தினர் மீது பாசத்துடன், பற்றுடன் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.


Tags :