Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சசிகலா விடுதலை ஆகும் தேதி 3 நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு

சசிகலா விடுதலை ஆகும் தேதி 3 நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு

By: Monisha Fri, 04 Dec 2020 5:38:57 PM

சசிகலா விடுதலை ஆகும் தேதி 3 நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனை காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.10 கோடி அபராத தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளது. சிறை நன்னடத்தை விதியின்படி, 129 நாட்கள் சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், பெங்களூர் சிறைத்துறைக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதில் சசிகலாவை சிறைத்துறையினர் சலுகைகளின் அடிப்படையில் முன்னதாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. அந்த கடிதம் சிறைத்துறையின் உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

case,imprisonment,sentence,sasikala,release ,வழக்கு,சிறை,தண்டனை,சசிகலா,விடுதலை

இதுபற்றி கூறிய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், 'விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பெங்களூர் சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே, ஒருசில நாட்களில் நல்ல செய்தி வரும்' என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆகும் தேதி 3 நாட்களில் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் பெங்களூரில் இருந்து வெளியாகி உள்ளது.

சிறையில் இருந்து சசிகலா சில தினங்களில் விடுதலை ஆகலாம் என்ற செய்தி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனால் அவருக்கு அ.ம.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் சென்னைக்கு காரில் வரும் போது 65 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags :
|