Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க சவுதி அனுமதி

தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க சவுதி அனுமதி

By: Nagaraj Thu, 03 Sept 2020 5:05:45 PM

தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க சவுதி அனுமதி

இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி... இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் இஸ்ரேல் விமானங்கள் இனி சவுதி வான்பரப்பை பயன்படுத்தி நேரடியாக ஐக்கிய அமீரகத்திற்கு செல்லலாம். அதேபோல் அமீரக விமானங்கள் சவுதி வான்பரப்பை பயன்படுத்தி இஸ்ரேல் செல்லலாம். இதன்மூலம் பயண நேரம் பல மணி நேரம் குறையும்.

இந்த நிகழ்வு சவுதி மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை தணித்து அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

airspace,israeli aircraft,saudi arabia,permission,negotiations ,வான்பரப்பு, இஸ்ரேல் விமானம், சவுதி, அனுமதி, பேச்சுவார்த்தை

இருநாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானதன் பின்னணியில், கடந்த 31ஆம் திகதி இஸ்ரேல் நாட்டில் இருந்து அமீரகத்திற்கு முதல் நேரடி வணிக விமானம் சென்றது.

இந்த விமானம் சவுதி அரேபியாவில் வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றது. இந்த நிகழ்வு மூலம் சவுதி அரேபியா வான்பரப்பு இஸ்ரேல் விமானம் பறந்து புதிய வரலாறு எழுதப்பட்டது. ஏனென்றால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த எந்த ஒரு விமானமும் சவுதி வான் எல்லையை பயன்படுத்த பல ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

தற்போது நீண்டதொரு பேச்சுவார்த்தைக்கு பிறகு சவுதி தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி வழங்கியுள்ளது.

Tags :