Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 9ல் கருத்து கேட்பு கூட்டத்திற்கு பின்பே பள்ளிகள் திறப்பு

வரும் 9ல் கருத்து கேட்பு கூட்டத்திற்கு பின்பே பள்ளிகள் திறப்பு

By: Nagaraj Thu, 05 Nov 2020 6:40:59 PM

வரும் 9ல் கருத்து கேட்பு கூட்டத்திற்கு பின்பே பள்ளிகள் திறப்பு

வரும் 9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம்... தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுமென அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை வருகின்ற நவம்பர் 16ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பினை கடந்த 31ம் தேதி தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்திருந்தது.

poll,teachers,parents,schools opening,government of tamil nadu ,கருத்துக்கேட்பு, ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளிகள் திறப்பு, தமிழக அரசு

தமிழகத்தில் இன்னும் கொரோனா இருந்து வரக்கூடிய நிலையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக கருதி பல்வேறு தரப்பிலிருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கூட கடிதம் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். பெற்றோர், ஆசிரியர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகளும் பல்வேறு விதமான கோரிக்கைகளை தமிழக அரசு வைத்தனர். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் நவம்பர் 9ம் தேதி கருத்து கேட்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tags :
|