Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

By: Monisha Fri, 17 July 2020 1:04:12 PM

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்தே சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இப்போது, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி மற்றும் தென் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது.

corona virus,vulnerability,district collector,shunmugam,consultation ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,மாவட்ட கலெக்டர்,சண்முகம்,ஆலோசனை

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்டங்களில் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மதுரை, தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட15 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனை கூட்டத்தில் முக்கியமாக கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

Tags :