Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இது தேர்தல் பொங்கல்- பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து சீமான் விமர்சனம்

இது தேர்தல் பொங்கல்- பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து சீமான் விமர்சனம்

By: Monisha Sun, 20 Dec 2020 1:12:14 PM

இது தேர்தல் பொங்கல்- பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், அன்பு தென்னரசு, மன்சூர் அலிகான், களஞ்சியம், ஜெகதீசபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமைகளாக்கும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டங்கள் மூலம் விளைவிக்கும் பயிர் என்பதை முதலாளிகள் தீர்மானிக்கும் நிலை உருவாகும். இச்சட்டங்கள் நல்லது என்று பேசும் மத்திய அரசு, இதில் பாதிப்பு வந்தால் பொறுப்பேற்க முடியாது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

agricultural laws,demonstration,corporate,pongal,gift collection ,வேளாண் சட்டங்கள்,ஆர்ப்பாட்டம்,கார்ப்பரேட்,பொங்கல்,பரிசுத்தொகுப்பு,

இந்த சட்டம் நிச்சயம் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பேராபத்தை விளைவிக்கும். விவசாயிகள் மீது அக்கறை இருப்பதாலேயே நாங்கள் இச்சட்டங்களை எதிர்க்கிறோம். வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்யவேண்டாம். திரும்பப்பெற வேண்டும். தற்போது தேர்தல் வருவதால் அதை மனதில் வைத்து பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ.2,500 அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தேர்தல் பொங்கல் தான்.

அமெரிக்கா போன்ற நாடுகளே ஓட்டுச்சீட்டு மூலம் தேர்தலை நடத்தும்போது, இந்தியாவில் மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நிச்சயம் குளறுபடி இருக்கத்தான் செய்கிறது. அதேபோல ரஜினிகாந்த் அரசியல் செய்யமாட்டார், நேரடியாக தேர்தலை சந்திப்பார் என்றுதான் சொல்லவேண்டும் என அவர் கூறினார். முன்னதாக சீமானை, சீக்கிய எழுத்தாளர் அஜய்பால் சிங் சந்தித்து ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

Tags :
|