Advertisement

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

By: Nagaraj Sat, 26 Sept 2020 10:15:51 PM

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உலக சுகாதார நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்... கொரோனா தடுப்பூசி தயாராவதற்கு முன்பு உலக அளவில் 20 லட்சம் மக்கள் இறக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 9 லட்சத்து 94 ஆயிரத்து 16 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

உலக முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷியாவில் கடந்த மாதம் கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். அமெரிக்காவும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

corona,20 lakh people,victims,crisis,action ,கொரோனா, 20 லட்சம் மக்கள், பலியாகும், நெருக்கடி, நடவடிக்கை

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ரியான் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கான சாதகமான சூழலை பார்க்கும்போது தடுப்பூசி தயாராவதற்கு முன்பே 20 லட்சம் மக்கள் கொரோனாவால் பலியாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உலகத் தலைவர்கள் உயிர்காக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுவதின் மூலம் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் எனக் குறிப்பிட்டார்.

Tags :
|
|