Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள பஞ்சாப் அரசு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்

ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள பஞ்சாப் அரசு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்

By: Karunakaran Wed, 29 July 2020 4:36:25 PM

ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள பஞ்சாப் அரசு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகளை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பள்ளி மட்டுமின்றி கல்லூரிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆன்-லைன் மூலம் பாடங்களை நடத்த மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. ஆன்-லைன் மூலம் பாடங்களை நடத்தும்போது ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். இதனால் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் வழங்க பஞ்சாப் அரசு முடிவெடுத்துள்ளது.

punjab government,smartphones,students,online lesson ,பஞ்சாப் அரசு, ஸ்மார்ட்போன்கள், மாணவர்கள், ஆன்லைன் பாடம்

இந்நிலையில் இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அலுவலகம், 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவ- மாணவிகள் இதனால் பயனடைவார்கள்.

கொரோனா காலத்தில் மாணவிகள் ஆன்-லைன் மூலம் கல்வி கற்க முன்னுரிமை அடிப்படையில் 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags :