Advertisement

காவல்துறையில் இதுவரை 877 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Sun, 21 June 2020 9:02:00 PM

காவல்துறையில் இதுவரை 877 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை 877 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 333 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கடந்த 3 நாட்களில் 10,655 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 144 சட்டத்தை மீறியதாக 10,604 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாஸ்க் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 35,177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் உட்பட 35 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

police,hospital,superintendent,corona victim ,
காவல்துறை, மருத்துவமனை, கண்காணிப்பாளர், கொரோனா பாதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க காலத்தில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சிவகங்கை, காரைக்குடி, இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 35 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags :
|