Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

By: Nagaraj Mon, 11 May 2020 7:59:00 PM

தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

மே 16 ல் தென் மேற்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் மே 13ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். அந்தமான் நிகோபார் பகுதியில் வரும் 16 ல் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

trichy,karur,salem,dharmapuri,vellore,report ,திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர், அறிக்கை

தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும். சென்னையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|
|