Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ள பாதிப்பில் சிறப்பான நடவடிக்கை... கலெக்டர்களுக்கு முதல்வர் பாராட்டு

வெள்ள பாதிப்பில் சிறப்பான நடவடிக்கை... கலெக்டர்களுக்கு முதல்வர் பாராட்டு

By: Monisha Sat, 28 Nov 2020 1:26:06 PM

வெள்ள பாதிப்பில் சிறப்பான நடவடிக்கை... கலெக்டர்களுக்கு முதல்வர் பாராட்டு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஆலோசனையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அனைத்து துறை செயல்பாட்டிலும் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சியை தருகிறது. அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் விருது பெற பாடுபட்டவர்களுக்கு நன்றி. அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் பெற்றது ஒட்டுமொத்த முயற்சியாகும்.

நிவர் புயலால் வேலூர், ராணிப்பேட்டையில் அதிக மழை பெய்துள்ளது. நிவர் புயல் காரணமாக ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

flood,impact,appreciation,edappadi palanisamy,collectors ,வெள்ளம்,பாதிப்பு,பாராட்டு,எடப்பாடி பழனிசாமி,கலெக்டர்கள்

நிவர் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிறப்பான நடவடிக்கை எடுத்த கலெக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 'இந்தியா டுடே' விருதுக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார்.

Tags :
|
|