Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெயிரூட் வெடிப்பு சம்பவத்தில் பாதித்தவர்களுக்கு உதவ விசேட மாநாடு

பெயிரூட் வெடிப்பு சம்பவத்தில் பாதித்தவர்களுக்கு உதவ விசேட மாநாடு

By: Nagaraj Sun, 09 Aug 2020 09:59:13 AM

பெயிரூட் வெடிப்பு சம்பவத்தில் பாதித்தவர்களுக்கு உதவ விசேட மாநாடு

விசேட மாநாடு நடத்த முடிவு... லெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, லெபனானுக்கு நன்கொடை வழங்க விஷேட மாநாடொன்றை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நடத்தவுள்ளார்.

இந்த நன்கொடையாளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை, இணைய வழி காணொளி தொடர்பாடலாக நடைபெறுமென பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இணைத் தலைவர் தலைமையில் இந்த மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டின் போது, உறுதிமொழிகள் பெறப்படும்.

france,beirut,assistance,special conference,promised ,பிரான்ஸ், பெய்ரூட், உதவி, விசேட மாநாடு, உறுதியளித்தார்

உதவியை எவ்வாறு விநியோகிப்பது என்று முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உதவிகள் மக்களுக்கு நேரடியாக சென்றடையும்.

வியாழக்கிழமை பெய்ரூட்டிற்கு விஜயம் செய்த மக்ரோன், மக்களிற்கு வழங்கப்படும் நிவாரணப்பொருட்கள் மற்றும் உதவிகள், ஊழல்வாதிகளின் கைகளிற்குச் செல்லாமல் மக்களிற்கு வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யப்படும்.

இதனை விசாரணை செய்வதற்காக, மீண்டும் செப்டெம்பர் மாதம் பெயிரூட் வந்து மக்களைச் சந்திப்பதாகவும், எமானுவல் மக்ரோன் பெய்ரூட் மக்களுக்கு உறுதியளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|