Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு

தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு

By: Monisha Tue, 17 Nov 2020 09:13:08 AM

தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு

சென்னை - திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை-திருப்பதி சிறப்பு ரெயில்(வண்டி எண்: 06057) வரும் 19-ந்தேதி காலை 6.25 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 9.40 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

இதேபோல் திருப்பதி-சென்னை சிறப்பு ரெயில் (06008), வரும் 19-ந்தேதி காலை 10.45 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.40 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

chennai,tirupati,special train,southern railway ,சென்னை,திருப்பதி,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே

கொரோனா பரவல் காரணமாக ரெயில் சேவை முழுவதும் தொடங்கப்படாத நிலையில் உள்ளது. பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சில இடங்களில் தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags :