Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் சிறப்பு ரெயில்களை 7-ந்தேதி முதல் இயக்க முடிவு; நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு

தமிழகத்தில் சிறப்பு ரெயில்களை 7-ந்தேதி முதல் இயக்க முடிவு; நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு

By: Monisha Fri, 04 Sept 2020 10:01:50 AM

தமிழகத்தில் சிறப்பு ரெயில்களை 7-ந்தேதி முதல் இயக்க முடிவு; நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு

தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலின் அடிப்படையில் கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 02675) வரும் 7-ந்தேதி முதல் தினசரி காலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 2.05 மணிக்கு கோவை சென்றடையும். இதைப்போல் கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் இண்டர்சிட்டி சிறப்பு ரெயில் (02676), மறுமார்க்கத்தில் மதியம் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை வந்தடையும்.

* கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி சிறப்பு ரெயில் (02084), (செவ்வாய்கிழமை தவிர்த்து) காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். இதைப்போல் மயிலாடுதுறை - கோவை ஜன்சதாப்தி சிறப்பு ரெயில் (02083), (செவ்வாய்கிழமை தவிர்த்து) மதியம் 2.50 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு கோவை வந்தடையும்.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சிறப்பு ரெயில் (02679), மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும். இதைப்போல் கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் இண்டர்சிட்டி சிறப்பு ரெயில் (02680), காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

special trains,tamil nadu,southern railway,booking,medical examination ,சிறப்பு ரெயில்கள்,தமிழ்நாடு,தெற்கு ரெயில்வே,முன்பதிவு,மருத்துவ பரிசோதனை

* கோவை - சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் அதிவேக சிறப்பு ரெயில் (02674), இரவு 10.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 6.35 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை அதிவேக சிறப்பு ரெயில் (06273), வரும் 8-ந்தேதி முதல் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.

* சென்னை எழும்பூர் - திருச்சி சிறப்பு ரெயில் (06795), காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கு திருச்சி சென்றடையும். இதைப்போல் திருச்சி - எழும்பூர் சிறப்பு ரெயில் (06796), வரும் 8-ந்தேதி முதல் காலை 10 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு சென்னைக்கு வந்தடையும்.

* காரைக்குடி - சென்னை எழும்பூர் அதிவேக சிறப்பு ரெயில் (02606), காலை 4.55 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும். இதைப்போல் சென்னை எழும்பூர் - காரைக்குடி அதிவேக சிறப்பு ரெயில்(02605), மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.10 காரைக்குடி சென்றடையும்.

* மதுரை - எழும்பூர் அதிவேக சிறப்பு ரெயில் (02636), காலை 7 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.35 மணிக்கு சென்னை வந்தடையும். இதைப்போல் எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மதுரை சென்றடையும்.

special trains,tamil nadu,southern railway,booking,medical examination ,சிறப்பு ரெயில்கள்,தமிழ்நாடு,தெற்கு ரெயில்வே,முன்பதிவு,மருத்துவ பரிசோதனை

* மதுரை - சென்னை எழும்பூர் அதிவேக சிறப்பு ரெயில் (02638), வரும் 7-ந்தேதி முதல் இரவு 9.20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை வந்தடையும். இதைப்போல் எழும்பூர் - மதுரை அதிவேக சிறப்பு ரெயில் (02637) வரும் 8-ந்தேதி முதல் இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.30 மதுரை சென்றடையும்.

* தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (02694), இரவு 8.05 தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை வந்தடையும். இதைப்போல் எழும்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரெயில் (02693), வரும் 10-ந்தேதி முதல் இரவு 7.35 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கப்படுகிறது. ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அனைத்து பயணிகளும் ரெயில் நிலையத்துக்கு வரும் போதும், பயணத்தின்போதும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அனைத்து பயணிகளும் பயண நேரத்துக்கு 90 நிமிடங்கள் முன்னால் ரெயில் நிலையம் வர வேண்டும்.

பயணம் செய்யும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் ஏ.சி. பெட்டிகளில் போர்வை, கம்பளிகள் வழங்கப்படாது. எனவே பயணிகள் தங்களுக்கு தேவையானதை தாங்களே கொண்டு வர வேண்டும். ரெயில் நிலையத்திலும், பயணத்தின்போதும் சமூக இடைவெளியை பயணிகள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :