Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவு

கர்நாடகத்தில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவு

By: Karunakaran Sat, 19 Dec 2020 08:47:48 AM

கர்நாடகத்தில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவு

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா அதிகமாக பரவியதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் தங்கள் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றன. கர்நாடகத்திலும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகத்தில் தற்போது கொரோனா வைரசின் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பள்ளி-கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த மாதத்தில் (ஜனவரி) இருந்து பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இம்மாத இறுதியில் கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

state government,online classes,karnataka,school open ,மாநில அரசு, ஆன்லைன் வகுப்புகள், கர்நாடகா, பள்ளி திறப்பு

இந்த ஆலோசனையின் முடிவில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவரும். ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளை திறக்க மாநில அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளதால் தனியார் பள்ளி-கல்லூரிகள் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வருகிற 20-ந்தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளதாக இருந்தாலும், அவை மாணவ-மாணவிகளின் மனநிலையை பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம். தனியார் பள்ளி-கல்லூரிகள் இந்த உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags :