Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குஜராத்தில் நாளை முதல் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை; முதல்வர் அறிவிப்பு

குஜராத்தில் நாளை முதல் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை; முதல்வர் அறிவிப்பு

By: Nagaraj Sun, 31 May 2020 11:27:13 AM

குஜராத்தில் நாளை முதல் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை; முதல்வர் அறிவிப்பு

குஜராத்தில் மாநிலம் முழுவதும் பஸ் சேவை... ஜூன் 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாநில போக்குவரத்து மற்றும் நகர பஸ் சேவைகள் அனுமதிக்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமுலில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் (மே 31) முடிவடைகிறது. இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் 'அன்லாக் 1.0' என்ற பெயரில் பல தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பஸ் போக்குவரத்து துவக்கம் மற்றும் அரசு அலுவலகங்கள் முழு திறனுடன் செயல்படுதல் உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளை அறிவித்தது.

இது தொடர்பாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது:

gujarat,tomorrow,practice,state,bus transport ,
குஜராத், நாளை, நடைமுறை, மாநிலம், பஸ் போக்குவரத்து

மத்திய அரசு அறிவித்தப்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்குக்கு பதிலாக எல்லாவற்றையும் திறக்கும் திசையை நோக்கி செல்கிறோம். கடந்த 10 நாட்களில் ஏற்கனவே ஆமதாபாத் மற்றும் சூரத்தின் சில பகுதிகளை தவிர பெரும்பாலான பகுதிகளில் தளர்வுகளை வழங்கினோம்.

தற்போதைய திறத்தல் முயற்சியில், எந்தவொரு பொருளாதார தடையும் இல்லாமல் கொரோனா வைரசுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இதனால் எந்த வேலையும் தடைபடாது. எல்லோரும் மாஸ்க் அணிந்துகொண்டு சமூக இடைவெளியை பராமரிக்கும் ஒரே நிபந்தனையுடன் சந்தைகள் திறக்க அனுமதிக்கப்படும்.

மாநிலம் முழுவதும் மாநில போக்குவரத்து மற்றும் நகர பஸ் சேவைகள் அனுமதிக்கப்படும். ஆனால் ஒரு பஸ்சில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாது. இரு சக்கர வாகனத்தில் ஒரு குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே இருவர் அனுமதிக்கப்படுவர். அதிலும், கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

உணவகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மால்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி செயல்படுவது குறித்து, ஜூன் 8ம் தேதிக்குள் அறிவிக்கப்படும். அத்தியாவசிய சேவைகள் வழங்கும் கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அனுமதிக்கப்படாது. சுகாதாரத் துறை புதிய கட்டுப்பாட்டு மண்டலங்களின் பட்டியலை இன்று இறுதி செய்யும். 'அன்லாக் 1' செயல்பாடுகள் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|