Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவில்களில் புத்தாண்டு வழிபாட்டுக்கு தீவிர கட்டுப்பாடுகள்; கலெக்டர் உத்தரவு

கோவில்களில் புத்தாண்டு வழிபாட்டுக்கு தீவிர கட்டுப்பாடுகள்; கலெக்டர் உத்தரவு

By: Monisha Fri, 18 Dec 2020 2:20:42 PM

கோவில்களில் புத்தாண்டு வழிபாட்டுக்கு தீவிர கட்டுப்பாடுகள்; கலெக்டர் உத்தரவு

திருத்தணி, திருவேற்காடு கோவில்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புத்தாண்டு வழிபாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி காலை 6.00 மணி முதல் கோயில் நடை திறக்கப்பட்டு மறுநாள் ஜனவரி 1-ம் தேதி இரவு 8.45 மணிக்கு நடை சாத்தப்படும்.

தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் தடை மற்றும் மாநிலம் முழுவதும் நடைமுறை உள்ள 144 தடை உத்தரவு ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஆண்டு திருப்புகழ் திருப்படி திருவிழா, 31.12.2020 மற்றும் 01.01.2021 ஆகிய நாட்களில் காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நள்ளிரவு 12.00 மணிக்கு தரிசன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மலைக்கோயிலில் நடைபெறும் பஜனைகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

இரவு 8.00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் மலைக்கோயிலில் தங்குவதற்கும், மலைக்கோயிலுக்கு செல்வதற்கும் மற்றும் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கும் அனுமதி கிடையாது.

temple,worship,new year,control,announcement ,கோவில்,வழிபாடு,புத்தாண்டு,கட்டுப்பாடு,அறிவிப்பு

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், 2021-ம் ஆண்டு ஜனவரியில் ஆங்கில வருட புத்தாண்டு அன்று, சிறப்பு பூஜைகள், அபிஷேகம் போன்றவை சிறப்பாக நடைபெறும். கொரோனா நோய் தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும், அரசின் வழிகாட்டு நடைமுறைமுறைகளின்படி, டிசம்பர் 31-ம் தேதி அன்று இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்பட்டு, ஜனவரி 1-ம் தேதி 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் முடிந்த பின்னர் காலை 6.00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவர். அன்றிரவு மீண்டும் 8.00 மணிக்கு நடை சாற்றப்படும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேல் உள்ள வயதானவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கக்கூடாது. பொதுமக்களுக்கு கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளிப் பகுதிகளில் பிரசாதம் மற்றும் அன்ன தானங்கள் வழங்க அனுமதிக் கூடாது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனை பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை.

சமுக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும். பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். உடல் நிலை சரியில்லாதவர்கள் காய்ச்சல் உள்ளவர்களை அனுமதிக்கக்கூடாது. அரசு வெளியிட்டுள்ள நோய் தொற்று பரவல் தடுப்பதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags :
|