Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வழிமுறைகள் இன்று வெளியிடப்படும்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வழிமுறைகள் இன்று வெளியிடப்படும்!

By: Monisha Wed, 26 Aug 2020 09:36:48 AM

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வழிமுறைகள் இன்று வெளியிடப்படும்!

109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, மாணவர் சேர்க்கை வழிமுறைகள் மற்றும் கட்டண விவரங்கள் இன்று தெரிவிக்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி தொடங்கி, 31-ந்தேதி வரை விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் நடைபெற்றது.

109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 95 ஆயிரம் இடங்களுக்கு, கிட்டத்தட்ட 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்ததாக தகவல் வெளியானது.

government college of arts and sciences,student admission,online,fees ,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,மாணவர் சேர்க்கை,ஆன்லைன்,கட்டணம்

இந்தநிலையில், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, மாணவர் சேர்க்கை வழிமுறைகள் மற்றும் கட்டண விவரங்கள் இன்று (புதன்கிழமை) அந்தந்த கல்லூரிகள் வாயிலாக மின்னஞ்சல் மற்றும் செல்போனில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்பட உள்ளது.

அதன் தொடர்ச்சியாக சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை 28-ந்தேதியும் (நாளை மறுநாள்), பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை 29-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அடுத்தமாதம் செப்டம்பர் 4-ந்தேதி வரையும் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை கல்லூரி கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|