Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கு தொடர் கொரோனா பரவலால் கல்லூரிகள் மூடும் அபாயம்

மாணவர்களுக்கு தொடர் கொரோனா பரவலால் கல்லூரிகள் மூடும் அபாயம்

By: Nagaraj Sat, 19 Dec 2020 9:30:55 PM

மாணவர்களுக்கு தொடர் கொரோனா பரவலால் கல்லூரிகள் மூடும் அபாயம்

கல்லூரிகள் மூடும் அபாயம்... மாணவர்களுக்கு தொடர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே பெரும் அச்சம் நிலவியுள்ளது.

colleges,corona spread,risk,temporary ,
கல்லூரிகள், கொரோனா பரவல், அபாயம், தற்காலிகம்

தற்போது சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. எனவே தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் கல்லூரிகளை தற்காலிகமாக மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags :
|