Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பழைய இலவச பஸ்பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம்; அமைச்சர் அறிவிப்பு

பழைய இலவச பஸ்பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம்; அமைச்சர் அறிவிப்பு

By: Nagaraj Mon, 07 Dec 2020 9:04:28 PM

பழைய இலவச பஸ்பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம்; அமைச்சர் அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படவில்லை. இந்ந்லையில் தமிழகத்தில் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில், பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

புதிய பஸ் பாஸ்கள் வழங்க முடியாத நிலையில் பழைய பஸ் பாஸ்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது.

இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா நெறிமுறைகளுடன் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

old buspass,student,students,minister,announcement ,பழைய பஸ்பாஸ், மாணவ, மாணவிகள், அமைச்சர், அறிவிப்பு

மேலும், முகக்கவசம் அணிந்தபடியே 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் வருகை தந்தனர். இதில் பஸ்களில் வரும் மாணவ, மாணவிகள் பஸ் பாஸ் கிடைக்குமா? பெற்றோருக்கு வருமானம் குறைந்த நிலையில் என்ன செய்வது என்று நினைத்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸையே பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். இது மாணவ, மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :