Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆதாரங்களுடன் ஆளுநரிடம் புகார் பட்டியல் சமர்ப்பிப்பு- மு.க. ஸ்டாலின்

ஆதாரங்களுடன் ஆளுநரிடம் புகார் பட்டியல் சமர்ப்பிப்பு- மு.க. ஸ்டாலின்

By: Monisha Tue, 22 Dec 2020 3:44:46 PM

ஆதாரங்களுடன் ஆளுநரிடம் புகார் பட்டியல் சமர்ப்பிப்பு- மு.க. ஸ்டாலின்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை ராஜ்பவனில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுடன், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பிறகு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

governor,mk stalin,meeting,complaint,action ,ஆளுநர்,முக ஸ்டாலின்,சந்திப்பு,புகார்,நடவடிக்கை

ஏற்கெனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால் ஆளுநரிடம் 97 பக்க புகார் பட்டியல் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் கொடுப்போம். புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்று கூறினார்.

Tags :