Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புறநகர் மின்சார ரயில்களில் கூட்டமில்லாத நேரத்தில் பெண் பயணிகள் பயணிக்கலாம்

புறநகர் மின்சார ரயில்களில் கூட்டமில்லாத நேரத்தில் பெண் பயணிகள் பயணிக்கலாம்

By: Nagaraj Sun, 22 Nov 2020 7:23:21 PM

புறநகர் மின்சார ரயில்களில் கூட்டமில்லாத நேரத்தில் பெண் பயணிகள் பயணிக்கலாம்

தெற்கு ரயில்வேயின் புதிய முடிவு... கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், புறநகா் மின்சார ரயில்களில் பெண் பயணிகள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் அரசு மற்றும் தனியாா் நிறுவன பணியாளா்கள் புறநகா் மின்சார ரயில்களில் பயணிக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இவா்களுக்காக, தினசரி 244 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அத்தியாவசிய சேவையின் கீழ் வராத பெண் பயணிகளை, புறநகா் மின்சார ரயில்களில், நாளை திங்கள்கிழமை (நவ.23) முதல் நெரிசல் இல்லாத நேரங்களில் பயணிக்கலாம். இதன்படி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை அதிகாலை முதல் காலை 7 மணி வரையும், காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை, இரவு 7.30 மணி முதல் ரயில் சேவை முடியும் வரை பயணிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பயணம் செய்யலாம்.

women,suburban train,permit,congestion,absence ,பெண்கள், புறநகர் ரயில், அனுமதி, கூட்ட நெரிசல், இல்லாத நிலை

இந்த நேரங்களில், மாதாந்திர பயணச்சீட்டு , சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண் பயணிகள் சிறப்பு மின்சார ரயிலில் பயணிக்கலாம். அல்லது எந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறுகிறாா்களோ, அங்கு, டிக்கெட் பெற்று பயணிக்கலாம்.

அவா்களுடன், 12 வயது வரை உள்ள குழந்தைகள் பயணிக்கலாம். காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பெண்களுக்கு பயணிக்க அனுமதி கிடையாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags :
|
|