Advertisement

தக்காளி விலை திடீர் சரிவு; விவசாயிகள் கவலை

By: Monisha Mon, 23 Nov 2020 4:54:51 PM

தக்காளி விலை திடீர் சரிவு; விவசாயிகள் கவலை

கிணத்துக்கடவு சந்தையில் சுற்றுவட்டார பகுதியில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த சந்தையில் தக்காளிதான் அதிக அளவில் விற்பனைக்கு வரும். இந்த சந்தையில் தக்காளிகளை கொள்முதல் செய்ய மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம்.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் விளையும் தக்காளி பழங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.26-க்கு ஏலம் போனது.

tomato,price,decline,supply,increase ,தக்காளி,விலை,சரிவு,வரத்து,அதிகரிப்பு


இந்நிலையில் நேற்று கிணத்துக்கடவு சந்தைக்கு 150 டன் தக்காளி வரத்து இருந்தது. இதில் ஒரு கிலோ தக்காளி ரூ.14-க்கு ஏலம் போனது. திடீரென யாரும் எதிர் பார்க்காத நிலையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.

அதேபோல் பீக்கங்காய்(ஒரு கிலோ) 12 ரூபாய்க்கும், புடலங்காய் 10 ரூபாய்க்கும், அவரைக்காய் 22 ரூபாய்க்கும்,பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும், பாகற்காய் 12 ரூபாய்க்கும், பீட்ரூட் 25 ரூபாய்க்கும், கத்தரிக்காய் (ஒருசிப்பம்)1200- ரூபாய்க்கும், முள்ளங்கி 230 ரூபாய்க்கும் ஏலம் போனது.

Tags :
|
|
|